Thursday, July 3, 2008

கிறுக்கனின் உளரல்கள்........


சிரிப்பு
-------------
அழகானது
குழந்தையின் சிரிப்பு!!!
அபூர்வமானது
ஏழையின் சிரிப்பு!!!
அசிங்கமானது
ஆணவ சிரிப்பு!!!
ஆரவாரமானது
நண்பர்களின் சிரிப்பு!!!

---------------------------------------------------------------------------
எல்லோர்க்கும் புது வருடம்
ஜனவரி ஒன்று
ஒவ்வொருவருக்கும் புது வருடம்
அவரவர் பிறந்த நாள்.....
--------------------------------------------------------------------------------
காதல் மழை
அவள் கண்ணில் கண்ணீர்
காதல் சிரிப்பு
அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பு
காதல் சத்தம்
அவள் கொலுசின் சத்தம்
காதல் பார்வை
அவள் ஓர பார்வை
காதல் பரிசு
அவள் முத்தம்
----------------------------------------------------------------------------------
அழகே
உன்னை நிலவுடன்
ஒப்பிட மாட்டேன்
ஏனென்றால்,
நிலவை காணலம்
ஆனால் அடையமுடியாது....
------------------------------------------------------------------
பணம் இன்று உன்னிடம்
நாளை மற்றவரிடம்
ஆனால் மனம் என்றும் உன்னிடம்
----------------------------------------------------------------------
வாழ்க்கை
புரிந்தவனுக்கு அது சொர்க்கம்
புரியாதவனுக்கு அது நரகம்
--------------------------------------------------------------------------
நட்பின் ஆரம்பம் சிரிப்பு
சிரிப்பின் ஆரம்பம் பண்பு
பண்பின் ஆரம்பம் பழக்கவழக்கம்
பழக்கவழக்கத்தின் ஆரம்பம் பெற்றோரில்...
---------------------------------------------------------------------------
ஆயிரம் விண்மீன்களுக்கு மத்தியில்
அழகாக தெரிவது நிலா
அதுபோல் லட்சம் பெண்களுக்கு மத்தியில்
அழகானவள் நீ ...............

-----------------------------------------------------------------------------
விண்ணிலும் உன்னை கண்டேன்மண்ணிலும் உன்னை கண்டேன்என் மனதிலும் உன்னை கண்டேன்யாரடி நீ அவள் எனக்கு...

--------------------------------------------------------------------------------
நம் இரு கண்களில் ஒரு கண்ணை இழந்தால்
பாதிப்பு மற்ற கண்ணுக்கும்நமது பார்வைக்கும்.....
அது போல நம் வாழ்வில் தாயும் தந்தையும்....

-------------------------------------------------------------------------------------

இந்த மண்ணில் உன்னை கண்ட நாள்
எனக்கு கார்த்திகை திருநாள்
நீ எனக்கு சம்மதம் கொடுத்த நாள்
எனக்கு தை திருநாள்
நாம் பெற்றோர் சம்மதம் கொடுத்த நாள்
எனக்கு சித்திரை திருநாள்
நான் உன்னை கரம் பிடித்த நாள்
எனக்கு சித்திரை திருவிழா...
----------------------------------------------------------------------------

Wednesday, July 2, 2008

மழைத்துளியில் ஒரு மழலை

காலையில சீக்கரமே எழுந்து அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் ரகு....

"மாலா சாப்பாடு தயாரா"

என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...
ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....

கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...

அப்போ இன்னைக்கு நான்தான் மலர‌ பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற‌ இருக்கு....

இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...
சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...

மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!

இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!

சரி தூங்கட்டும் விடு....

"அப்பா அப்பா"
மலர் குரல் கொடுத்துக்கிட்டே ர‌குவிட‌ம் வ‌ர‌!!!
மலர் குட்டி வாடா வா.....

அப்பா கிளம்பிட்டீங்களா???

ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......
அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???

இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,
அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க‌" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...

ஏன்டீ நான் உன‌க்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..
என‌ மாலா செல்ல‌மாய் க‌ண்டிக்க‌ ...

பாருங்க‌ப்பா அம்மாவை மிர‌ட்டுராங்க‌....
மல‌ர் சிணுங்கிய‌தும்..

என் செல்ல‌த்த திட்டாதே... இன்னைக்கு ம‌ல‌ர‌ ஆட்டோல‌ கூட்டிட்டு போ ச‌ரியா,...

என்ன ம‌ல‌ர் குட்டி ஓக்கே தானே உன‌க்கு...
ம்ம் ச‌ரிப்பா அட்ஜ‌ஸ்ட் பண்ணிக்குறேன்...

செல்லக்குட்டிடா நீ.......
அப்பா இன்னைக்கு டீவில‌ வ‌ருவீங்க‌ளா???..

ம்ம் வ‌ருவேன்டா, ம‌ழைக்கால‌ம்ல‌... வானிலை அறிக்கை சொல்ல‌ கூப்பிடுவாங்க‌....

அப்போ அப்பா இன்னும் இர‌ண்டு நாளைக்கு ந‌ல்ல‌ ம‌ழைபெய்யும்ன்னு சொல்லுங்க‌ப்பா...

ஏன்டாக் குட்டி உன‌க்கு ம‌ழைனா அவ‌ளோ பிடிக்குமா...

இல்ல‌ப்பா என் பிரண்ட் தீபா வீட்ல‌ ம‌ழை பெய்தா த‌ண்ணீ ஒழுகுதாம்...அவ‌ங்க‌ அப்பா ச‌ரி செய்ய இர‌ண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க‌ ம‌ழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு ம‌ழையே வ‌ராதுல

அதான் அப்ப‌டி சொல்ல‌ச்சொன்னேன்.... ம‌ற‌க்காம‌ சொல்லிடுங்க...
ம‌ல‌ர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன‌ சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.

Tuesday, July 1, 2008

கிறுக்கனின் கிறுக்கல்கள்....

உன் புன்னகையை கண்டேன் வெண்மேகம் மறந்தேன் உன் சுவாசம் உணர்ந்தேன் தென்றலை மறந்தேன் உன் விழியை கண்டேன் நிலவின் ஒளியை மறந்தேன் உன்னையே கண்டேன் நான் என்னை மறந்தேன்

--------------------------------------------------------------------------------------
சித்திரையில் உன்னை கண்டேன் நித்திரையை நான் மறந்தேன் என் வாழ்வில்...

------------------------------------------------------------------------------------
தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஓர் ஒற்றை ரோஜா என் காதல் ,
காதலே நீ நடந்து வருகிறாயா
இல்லை ரயிலில் வருகிறாயா

-----------------------------------------------------------------------------------

என் வாழ்வில் வசந்தமாய் வருவாய் என காத்திருந்திருந்தேன் நான்

வந்தாய் நீ வசந்தமாய் அல்ல

புயலாய் மண வாழ்த்துடன்

----------------------------------------------------------------------------------------


மொழியை போன்றவள் தாய்

மொழிகளின் முதல் எழுத்து "அ "

உயிரின் முதல் எழுத்தும் அதுவே...

-----------------------------------------------------------------------------------------

தாகம் போன்றது நம் நட்பு ஏனென்றால்

தண்ணீர் அழிந்தாலும் தாகம் தீராது

-----------------------------------------------------------------------------------------

Monday, June 30, 2008

'வாத்தியார் சுஜாதா' பற்றி 'நிஜ சுஜாதா'வின் உருக்கமான பேட்டி

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நம் வாத்தியார் சுஜாதா அவர்களைப் பற்றி 'நிஜ சுஜாதா'ம்மா 'ஆனந்தவிகடன்' பத்திரிகையில் பேட்டியாகச் சொல்லியிருப்பது இது.

'சுஜாதா' என்ற தனது பெயரை இத்தனை நாட்கள் சுமந்து கொண்டிருந்த தனது கணவருக்கு அவர் செலுத்தியிருக்கும் அஞ்சலி இது. படித்துப் பாருங்கள்.

“சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து.. 800 மில்லி உடம்புலேயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம் சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, வர மாட்டேன்னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், “ஊம்.. ஊம்’னு மட்டும் சொன்னார். ‘திடீர்னு நீ யாரு’ன்னு கேட்டார். ஏன் இப்படிப் பேசறீங்க? என்ன பண்றது சொல்லுங்கோ”ன்னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன்.

வாய் கோணித்து.. ‘ஸ்ட்ரோக்’குன்னாங்க.. கை வரலைன்னதுமே, “ஐ ஆம் ட்ராப்டு.. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!’னு புலம்ப ஆரம்பிச்சிட்டார். “அப்டிலாம் சொல்லாதேள்.. நான் இருக்கேன்ல.. நீங்க சொல்லச் சொல்ல.. நான் எழுதித் தர்றேன்னேன்.. அவருக்குக் கேட்கலியா.. கேட்க விரும்பலையான்னு தெரியலை!

ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பாத்துண்டேன்.. அவருக்கே, அவருக்குன்னு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, “எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாம சாப்புடுறது? இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்மாக்கிடாது!”னு சிரிப்பார்.

நல்ல மனுஷன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.




சின்ன வயசுல அவ்வளவா காசு, பணம் வரலை. ஆனா ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமா பாத்துக்கிட்டார்.

என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்ன பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா.. இதைச் சொன்னா, “அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம்? அவாளுக்கெல்லாம் யங் பிரைன்.. உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து. இல்லியா”ன்னுவார்.

அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும்.

அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாஸ¤க்குப் போறதில்ல. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார்.

இனி எனக்கு என்ன இருக்கு? ஆனாலும் போகணும்.. அவர் இருந்தா அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார்.

“உடம்பை பார்த்துக்குமா இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?”னு பசங்க கோச்சுக்குவாங்க.. “இப்படில்லாம் இல்லைன்னாத்தான் அவருக்கு உடம்பு படுத்தும்”னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதறது..?

ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, “ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா நான் செத்துட மாட்டேன்.. நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற?”ன்னாரு.

தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுன்னு எது கொடுத்தாலும் சின்னதா “தேங்க்ஸ்..” சொல்வார். “எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்..?”னு கேட்டா, “உன்கிட்டயும் தேங்க்ஸ¤க்கு ஒரே அர்த்தம்தானே!”னு சிரிப்பார்.

ஐயோ! ஐ பீல் கில்ட்டி..! நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்!

என்னை எப்படில்லாம் பார்த்துண்டார்? என் பேர்ல எழுதறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும்.

நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சிருக்கணும்? நான் இருக்குறவரை.. அவரை போஷிச்சிருக்க வேண்டாமா.. !

“பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?”னு ஒருத்தர் கேட்டா.

“ஆமா. அவர் இப்ப ‘பாடி’ ஆயிட்டாருல்ல.. இனி அவர் வெறுமனே ‘பாடி’ மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..!”

'நிஜ சுஜாதா'வின் இந்தக் கேள்விக்கு, 'வாத்தியார் சுஜாதா'தான் பதில் சொல்ல வேண்டும்.
நன்றி : ஆனந்தவிகடன்

பொன்மொழி

பொன்மொழி
அறிவு - ஒரு குவளை பால்
புத்திசாலித்தனம் - ஒரு பசு மாடு
(நன்றி - ஆனந்த விகடன்)

Friday, June 27, 2008

மனதைத் தொட்ட வரிகள்

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்
- ஸ்காட்லாந்து பொன்மொழி

2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
- கவியரசு கண்ணதாசன்

3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

4. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்
- நெப்போலியன்

5. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
- ஆஸ்கார் ஒயில்ட்

6. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்
- பெர்னாட்ஷா

7. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
- ஹாபர்ட்.

8. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
- பாலஸ்தீனப் பழமொழி

9. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
- ப்ரெட்ரிக் நீட்சே

10. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
- வின்ஸ்டர் லூயிஸ்

இந்த பத்துப் பொன்மொழிகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது?

எழுதுங்கள்!

இந்த நாட்டை எது காப்பாற்றும்?

இந்த நாட்டை எது காப்பாற்றும்?

எது காப்பாற்றும்?

திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்றுசொல்லிவிட்டு, “ அந்தப் பணத்தை எனக்குக் கொடு” என்று வாங்கிக்கொள்ளும் சீர் திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறேன்.

தன் பதவியில் இருக்கும்போது காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன்அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால்,” ஐயோ! அநியாயம்!”என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.

தராசைத் தலைகீழாக நிறுக்கும் வணிகர்களை, வியாபாரிகளைப்பார்த்திருக்கிறேன்.

பத்து ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.

ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறுமாதத்திற்குப் பிறகு”நகை வட்டியில் மூழ்கி விட்டது” என்று சொல்லும்அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.

அரிசியில் கலப்பதற்கென்று தனிக்'கல் தொழிற்சாலை'யே நடத்தும் அரிசிவியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.

துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பைவரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.

ஆட்டுக் கறியில் மாட்டுக் கறியையும் கலந்து பிரியாணி போடும் அசைவஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன். அவர்களே பதினைந்து ரூபாய்க்குகோழி வாங்கி அதை எண்பது ரூபய்க்கு விற்கின்ற அநியாயத்தைக்கண்டிருக்கிறேன்.

நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும்கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.

அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்றுவிற்பனை செய்யும் துணிக்கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.

இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோவில்களைக் கண்டேனோஅவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவிமதம், ஒரே துணைக்கருவி இறைவன். அந்த மதமும், இறைவனும்தான் மனிதர்களை மீட்கமுடியும்.

தெய்வபக்தி வளர வளர,”நமக்கேன் வம்பு; ஆண்டவன் நம்மைச்சபித்து விடுவான். ஆண்டவன் நம்மைத்தண்டித்து விடுவான்” என்றெல்லாம் பயந்து பொய் சொல்லாமலே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு

---------எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்